Monday, 31 December 2018

Happy 2019


OBC Employees Welfare Assoctiation (India Post) wishes every one a very happy and prosperous NEW YEAR 2019


Monday, 15 October 2018

Bonus declared


2017-18ம் ஆண்டிற்கான 60 நாள் போனஸ் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.





Sunday, 14 October 2018

Poor IAS apirants welwisher D Shankar expires.


சங்கர் IAS  அகாடெமியின் நிறுவனரும் ஏழை எளிய மக்களின் IAS  கனவுகளின் விடிவெள்ளியுமான திரு D  சங்கர் IAS  அவர்கள் கடந்த 12.10.2018 அன்று அவரது இல்லத்தில் காலமானார் என்பதை ஆழந்த வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.  



திரு சங்கர் அவர்கள் OBC  நலன் சார்ந்த போராட்டங்களில் முழுமையாக பங்கேற்று தனது கருத்துக்களை தைரியத்துடன் வெளிப்படுத்தியவர்.  
அவர் நமது அஞ்சல் OBC  நடத்திய விழிப்புணர்வு கூட்டத்திலும் கலந்துக்க கொண்டு நல்ல பல பயனுள்ள கருத்துக்களை பதிவு செய்துள்ளார். 


இவரது பயிற்சி கூடத்தில் படித்து பலனடைந்த பலர் இந்தியா முழுவதும் பல உயர் பதவிகளில் பணியாற்றி வருகின்றனர்.  

சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ள ஒரு நாள் மனிதர் தனது வாழ்க்கை பயணத்தை மிகவும் சுருக்கமாக முடித்துக் கொண்டார்.  

அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் அஞ்சல் OBC  தனது ஆழந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது.



Cash Limit

அஞ்சலங்களுக்கிடையே நடைபெறும் பண பரிவர்த்தனையில் உச்சவரம்பு குறித்த சுற்றறிக்கை.



Tuesday, 2 October 2018

Demonstration before LIC

A demonstration is scheduled to be held today at 13.00 hours before LIC.  All the activists of Postal OBC are requested to participate.


Tuesday, 11 September 2018

TN Circle Vice President Sri A J Purushothaman expired


தமிழக அஞ்சல் OBC  துணை தலைவரும், OBC  பேரமைப்பின் துணை தலைவருமான திரு A  J  புருஷோத்தமன் அவர்கள் கடந்த 03.09.2018 அன்று காலமானதை அனைவருக்கும் தொலைபேசி வாயிலாக தெரிவித்திருந்தோம்.  அனைவரிடமும் அன்போடு பழகக் கூடியவரும், தனது போராட்ட குணத்தின் காரணமாக நிர்வாகத்திற்கு ஒரு அச்சுறுத்தலாகவும் திகழ்ந்தவர்.  சங்க நிகழ்ச்சிகளை மிகவும் பிரமாண்டமாய் ஏற்பாடு செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றவர்.  திரு புருஷோத்தமனின் இழப்பு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி நமது OBC  பிரிவினருக்கே ஓர் மாபெரும் இழப்பாகும்.  அவரது ஆன்மா சாந்தியடைய பிரதிப்போமாக.





அன்னாரது புகழஞ்சலி கூட்டம் சென்னை GPO  வளாகத்தில் 18.09.2018 அன்று மாலை நடைப்பெற உள்ளது.  OBC  சங்க செயல்வீரர்கள் அனைவரும் தவாறது கலந்துக்க கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தமிழக அஞ்சல் OBC 

Sunday, 26 August 2018

Mupperum Vizhaa at Attur, Salem


தமிழக அஞ்சல் OBC  ஆத்தூர்  கிளை முப்பெரும் விழாவை 26.08.2018 அன்று ஏற்பாடு செய்திருந்தது.  இந்த நிகழ்ச்சியில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் 123வது சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டவடிவம் பெற்றதற்கு விழாவும், OBC  விழிப்புணர்வு கூட்டமும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பாராட்டும் தெரிவிக்கப் பட்டது.  இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக OBC  பேரமைப்பின் மாபொதுச்செயலர் திரு கு தனசேகரன், அஞ்சல் OBC  மாநில சங்க நிர்வாகிகள் திரு ஹரிகிருஷ்ணன், திரு ஜோதிகுமாரன், திரு தனசேகரன் மற்றும் ஆத்தூர் கிளைசங்க செயல் வீரர்கள் கலந்துக்க கொண்டு சிறப்பு செய்தனர்.  இந்த விழாவை திரு டில்லிபாபுவுடன் இனைந்து ஆத்தூர் கிளை சங்க நிர்வாகிகளும் உறுப்பினர்களும் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.  தமிழக அஞ்சல் OBC  நிகழிச்சி ஏற்பாட்டர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

மாநில செயலாளர்













Friday, 17 August 2018

Deep Condolence from OBC EWA


தொடர்ந்து நாம் இரு முதுபெரும் தலைவர்களை இழந்திருக்கிறோம்.  நமது அஞ்சல் OBC  தனது ஆழந்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறது.



Tuesday, 14 August 2018

Sunday, 12 August 2018

Membership strength as on 12.08.2018


நமது அஞ்சல் OBC ன் உறுப்பினர் எண்ணிக்கை தற்போது 1338 ஆக உள்ளது.  ஏற்கெனவே நமது சங்கத்தின் கிளைகளை துவக்கிய கோட்டங்கள் தங்களது அண்டை கோட்டைகளையும் இணைத்து இந்த சங்கத்தை வலுப்பெற செய்யவேண்டுமென கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். 

தற்போது OBC  நலன் காக்கும் 123வது சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை விழாவாக கொண்டாட ஆத்தூரில் 26.02.2018 அன்று முடிவு செய்யப்பட்டுள்ளது.  அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அஞ்சல் OBC ன் உறுப்பினர் எண்ணிக்கை கோட்டம் வாரியாக

Sl. No.
Name of the Division / Branch
No. of members
01
Dharmapuri Division
277
02
Salem East Division (including Atur Branch)
253
03
Cuddalore Division
209
04
Chennai City Central Division
160
05
Theni Division
112
06
Chennai GPO
106
07
Mail Motor Service, Chennai
79
08
Tiruchirapalli Division
60
09
Dindigul Division
25
10
Postal Accounts & Finance, Chennai
20
11
MMS, Madurai
12
12
Srirangam Division
11
13
Chennai City South Division
6
14
Virudhunagar Division
2
15
Chennai City North Division
2
16
Tiruvannamalai Division
1
17
Thanjavur Division
1
18
Erode Division
1
19
Tirupattur Division
1

Total
1338

மாநில செயலாளர் 
அஞ்சல் OBC 

Friday, 10 August 2018

Atur Postal OBC celebrates the success of 123rd OBC bill in Parliament


அஞ்சல் OBC ன் ஆத்தூர் கிளை சங்கம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு 123வது சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதின் மூலம் சட்ட அங்கீகாரம் பெற்றததை வெற்றி  விழாவாக கொண்டாடவுள்ளது.  அஞ்சல் OBC  செயல்வீரர்கள் அனைவரும் கலந்துக்க கொண்டு சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.


Monday, 6 August 2018

Constitutional Status to NCBC



OBC  பிரிவினரின் நீண்ட நெடுங்கால கோரிக்கையான தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது குறித்த விவாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து 06.02.2018 அன்று மாநிலங்களைவையிலும் நிறைவேற்றப்பட்டது.  இதன் காரணமாக தேசிய   பிற்படுத்தப் பட்டோர் ஆணையம் கூடுதல் பலத்துடன் செயல்படும்  என்ற செய்தியை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இது OBC  இனத்தவரின் வாழ்வில் ஓர் பொன்னாள்.  இதற்காக அரும்பாடுபட்ட OBC  பாராளுமன்ற குழு தலைவர் மாண்புமிகு கணேஷ் சிங்க், வாழும் V  P  சிங்க் ஐயா S  K  கார்வேந்தன், K  தனசேகர் மற்றும் NCOBC  உறுப்பு சங்க செயல்வீரர்களுக்கும் அஞ்சல் OBC  தனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

மாநில செயலாளர்
அஞ்சல் OBC 

Thursday, 2 August 2018

123rd Amendment - bill passed in Lok Sabha on 02.08.2018



தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் 123 வது சட்ட திருத்த மசோதா 02.08.2018 அன்று மக்களவையில் நிறைவேற்றப் பட்டது.  15 நாட்களுக்குள் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்படும் என நம்புகிறோம்.

இது OBC  பிரிவினருக்கும் அதன் நலனுக்காக பாடுபட்ட பல நல இயக்கங்களின் தொடர் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகும்.  இது நமது சமுதாய பணிக்கு கிடைத்திருக்கும் மற்றுமோர் அங்கீகாரமாகும்.

இந்த வெற்றிக்கு அரும்பாடு பட்ட OBC பாராளுமன்ற குழு தலைவர் மாண்புமிகு கணேஷ் சிங், NCOBC  கௌரவ தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் NCBC  உறுப்பினருமான மாண்புமிகு S  K  கார்வேந்தன், மாபொதுச்செயலாளர் திரு K  தனசேகர் மற்றும் NCOBC யில் அங்கம் வகிக்கும் அணைத்து உறுப்பு சங்கங்களுக்கும் நமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மாநில செயலாளர்
அஞ்சல் OBC 

Sunday, 1 July 2018

Office bearers elected in the meeting held on 24.06.2018

கடந்த 24.06.2018 அன்று நடைப்பெற்ற முப்பெரும் விழாவில் அஞ்சல் ஊர்தி பணியகத்தை சார்ந்த கீழ்காணும் செயல் வீரர்கள் 2018-19 ஆண்டிற்கான நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப் பட்டனர். தேர்நதெடுக்க பட்ட நிர்வாகிகளுக்கு தமிழக அஞ்சல் OBC  தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

தலைவர்                                                          திரு M  ரவி

துணை தலைவர்கள்                                 திரு D  முருகப்பன்
                                                                             திரு S  வேலப்பன்
                                                                             திரு S K  உசேன்
                                                                             திரு K  வெங்கடேஷ் பெருமாள்
                                                                             திரு P யுவராஜ்

செயலாளர்                                                     திரு K  பெருமாள்

உதவி செயலாளர்கள்                               திரு A கோலப்பன்
                                                                             திரு S  காளிராசு
                                                                             திரு S  சிவகுமார்
                                                                             திரு K  ஜெயராமன்
                                                                             திரு N  பிரபு

பொருளாளர்                                                  திரு V  சந்திரசேகர்

உதவி பொருளாளர்                                    திரு L  மாரியப்பன்

அமைப்பு செயலாளர்                               திரு K  கிருஷ்ணகுமார்

தணிக்கையாளர்                                       திரு P  பிரபாகர்
                                                                         

Thursday, 21 June 2018

Mupperum Vizha in Chennai


தமிழக அஞ்சல் OBC ன் முப்பெரும் விழாவாக சமுதாய போராளி மாமேதை திரு விஸ்வநாத் பிரதாப் சிங் அவர்களின் பிறந்த நாள் விழா, சென்னை அஞ்சல் ஊர்தி பணியகம் மற்றும் சென்னை மத்திய கோட்ட  மாநாடு ஆகிய நிகழ்ச்சிகள் அணைத்தும் ஒன்றிணைத்து சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள நக்கீரர் அரங்கில் 24.06.2014 ஞாயிறு அன்று காலை 09.30 மணி முதல் சிறப்பாக நடைப்பெற உள்ளது.  இந்த நிகழ்ச்சியில் தமிழக அஞ்சல் வட்ட OBC தொடர்பு  அதிகாரியும், MM  & BD  இயக்குனருமான உயர்திரு K  சோமசுந்தரம் IPoS  மற்றும் தேசிய பிற்படுத்தப்பட்டோர்  சங்கங்களின் பேரமைப்பின் மாபொது செயலாளர் உயர்திரு K  தனசேகர் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்த உள்ளனர்.  இந்த விழாவில் அனைவரும் தவாறது கலந்துக்கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறர்கள் 



Saturday, 13 January 2018


அனைவருக்கும் பொங்கல்
 நல் வாழ்த்துக்கள் 




Tuesday, 2 January 2018

Meets officers to share new year greetings

அஞ்சல் OBC ன் தமிழ் மாநில சங்க நிர்வாகிகள் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தமிழக அஞ்சல் அதிகாரிகளுடன் பகிர்ந்துக் கொண்டனர்.  இன்றைய சந்திப்பில் திரு சம்பத் (CPMG ), திரு R  ஆனந்த்  (PMG CCR ), திரு JT  வெங்கடேஸ்வரலு(PMG  Mails ), திரு சோமசுந்தரம் (DPS  Mails), திரு கோவிந்தராஜன் (DPS  CCR ), திரு துரைராஜன் (AD  BD ), திரு ஆறுமுகம் (APMG  Staff ), திரு பாலச்சந்தர் (AD ) திரு குருநாதன் (SSP  North), திரு நீல  கிருஷ்ணன்  (SSP  Central) திரு அலோக்  ஓஜா  (CPM  சென்னை GPO) ஆகியோரை சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டோம்.








Salem Jothimani Retired on 30.12.2017

நமது அஞ்சல் OBC ன் மேற்கு மண்டல செயலரும், மாநில சங்கத்தின் துணை தலைவரும், சேலம் கிழக்கு கோட்டத்தின் செயலாளருமான திரு P  ஜோதிமணி அவர்கள் கடந்த 30.12.2017 அன்று பணி ஓய்வு பெற்றார்.  
சேலம் ஜோதிமணி அவர்கள் நமது அஞ்சல் OBC  சங்கத்தில் தன்னை இணைத்தது முதல் நமது சங்கம் வலுப்பெற பல முயற்சிகளை மேற்கொண்டவர்.  சேலம் கிழக்கு கோட்டத்தில் அதிகமான உறுப்பினர்களை சேர்த்ததுடன் ஆத்தூர்,  தர்மபுரி ஆகிய கோட்டங்கள் உருவாக காரணமானவர்.  சங்கத்தின் அணைத்து போராட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும், கூட்டங்களிலும் பங்கு பெற்றவர்.  அவரது பணி  ஒய்வு காலம் மிகவும் சிறப்பானதாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும், ஆரோகியத்துடனும் அமைந்திட மாநில அஞ்சல் OBC  தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.