Saturday, 13 January 2018
Tuesday, 2 January 2018
Meets officers to share new year greetings
அஞ்சல் OBC ன் தமிழ் மாநில சங்க நிர்வாகிகள் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தமிழக அஞ்சல் அதிகாரிகளுடன் பகிர்ந்துக் கொண்டனர். இன்றைய சந்திப்பில் திரு சம்பத் (CPMG ), திரு R ஆனந்த் (PMG CCR ), திரு JT வெங்கடேஸ்வரலு(PMG Mails ), திரு சோமசுந்தரம் (DPS Mails), திரு கோவிந்தராஜன் (DPS CCR ), திரு துரைராஜன் (AD BD ), திரு ஆறுமுகம் (APMG Staff ), திரு பாலச்சந்தர் (AD ) திரு குருநாதன் (SSP North), திரு நீல கிருஷ்ணன் (SSP Central) திரு அலோக் ஓஜா (CPM சென்னை GPO) ஆகியோரை சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டோம்.
Salem Jothimani Retired on 30.12.2017
நமது அஞ்சல் OBC ன் மேற்கு மண்டல செயலரும், மாநில சங்கத்தின் துணை தலைவரும், சேலம் கிழக்கு கோட்டத்தின் செயலாளருமான திரு P ஜோதிமணி அவர்கள் கடந்த 30.12.2017 அன்று பணி ஓய்வு பெற்றார்.
சேலம் ஜோதிமணி அவர்கள் நமது அஞ்சல் OBC சங்கத்தில் தன்னை இணைத்தது முதல் நமது சங்கம் வலுப்பெற பல முயற்சிகளை மேற்கொண்டவர். சேலம் கிழக்கு கோட்டத்தில் அதிகமான உறுப்பினர்களை சேர்த்ததுடன் ஆத்தூர், தர்மபுரி ஆகிய கோட்டங்கள் உருவாக காரணமானவர். சங்கத்தின் அணைத்து போராட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும், கூட்டங்களிலும் பங்கு பெற்றவர். அவரது பணி ஒய்வு காலம் மிகவும் சிறப்பானதாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும், ஆரோகியத்துடனும் அமைந்திட மாநில அஞ்சல் OBC தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.